வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (09:15 IST)

தமிழிசை பதிவு செய்து உடனே டெலிட் செய்த டுவீட்! நெட்டிசன்கள் கிண்டல்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இருப்பார் என்பதும் குறிப்பாக டுவிட்டரில் அவர் தினந்தோறும் தனது கருத்துக்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே
 
அவ்வப்போது நிகழும் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் தமிழிசை சவுந்தரராஜன், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கவும் டுவிட்டரை அவர் பயன்படுத்தி வருவது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று காலை தமிழிசை சௌந்தராஜன் டுவிட்டரில் தவறுதலாக ஒரு டுவீட்டை பதிவு செய்துளார். K, O ஆகிய ஆங்கில எழுத்துக்களால் கொண்ட இந்த ட்விட்டை அவர் பதிவு செய்த சில நிமிடங்களில் நீக்கிவிட்டார். டைப் செய்யும்போது ஏற்பட்ட தவறினால் இந்த டுவீட் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த டுவிட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்த நெட்டிசன்கள் கோகோ, கொக்கரக்கோ என கலாய்த்து விமர்சனம் செய்து வருகின்றனர்