செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (08:48 IST)

திருச்சியில் இருந்தும் விரட்டுவோம்: வங்கி மேலாளருக்கு குவியும் கண்டனங்கள்

திருச்சியில் இருந்தும் விரட்டுவோம்: வங்கி மேலாளருக்கு குவியும் கண்டனங்கள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு வங்கியின் மேலாளர் தன்னிடம் லோன் கேட்டு வந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் ஹிந்தி தெரியுமா என்று கேட்டதாகவும், இந்தி தெரியாததால் லோன் கொடுக்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியானது 
 
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து அரசியல் கட்சிகள் இந்த செய்தியை அரசியலாக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் ஹிந்தி பிரச்சினையால்தான் லோன் இல்லை என்று கூறினாரா? என்பது தெரியாத நிலையில் இந்த பிரச்சனையை பெரிதாக்கி விரும்பாத அந்த வங்கி நிர்வாகம் உடனடியாக அந்த மேலாளரை திருச்சிக்கு இடமாற்றம் செய்துள்ளது 
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவர் இடமாற்றம் செய்யப்பட்ட ஆணையின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து திருச்சியிலிருந்தும் அந்த நபரை விரட்டுவோம் என்றும் நெட்டிசன்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதுகுறித்த ட்வீட் பெருமளவில் வைரலாகி வருவதால் அவர் திருச்சியில் இருந்தும் மாற்றப்படுவாரா? அவரது சொந்த ஊருக்கே அனுப்பப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்