செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (17:04 IST)

இந்தி தெரியாததால் லோன் கொடுக்க மறுத்த வங்கி மேலாளர் இடமாற்றம்!

இந்தி தெரியாததால் லோன் இல்லை என்று கூறிய வங்கி மேலாளர் இட பணியிடமாற்றம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்ற பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியம் வங்கியில் லோன் வாங்க விண்ணப்பித்திருந்தார். இதுகுறித்து வங்கி மேலாளரிடம் நேர்காணலுக்கு வரச் சென்றபோது ஹிந்தி உங்களுக்கு தெரியுமா என்று மேலாளர் கேட்டுள்ளார். அதற்கு அவர் தனக்கு தமிழ் ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்று பதில் அளித்தவுடன் லோன் பெறுவதற்கான விண்ணப்பத்தை அவர் பரிசீலிக்காமல் ஹிந்தி தெரியாதவர்களுக்கு லோன் தர முடியாது என கூறியதாக தெரிகிறது 
 
இது குறித்து மானநஷ்ட வழக்கு தொடர்ந்த மருத்துவர் பாலசுப்பிரமணியம் தனக்கு நீதி வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கம்போல் இந்த விஷயத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் செய்தனர்.
 
இந்த நிலையில் இந்தி தெரியாததால் கடன் வழங்க முடியாது என்று கூறியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அந்த வங்கியின் மேலாளர் விஷால் நாராயணன் என்பவர் பணியிட மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது