ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (09:13 IST)

நீட் தேர்வில் தோல்வி; திருவள்ளூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை

suicide
நீட் தேர்வு முடிவுகள் நேற்றிரவு வெளியான நிலையில் இன்று காலை நீட் தேர்வில் தோல்வி அடைந்த திருவள்ளூர் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவிகளில் சிலர் தற்கொலை செய்து வருகின்றனர் என்றும் அதனால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் ஜூலை 17ஆம் தேதி நடந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் இன்று காலை திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்தார் 
 
இதனை அடுத்து அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்