செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (14:01 IST)

ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட தொகை எவ்வளவு: சென்னை காவல் ஆணையர் தகவல்!

எஸ்பிஐ வங்கிகளில் உள்ள பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களில் சென்சாரை கையால் வைத்து மறைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட தகவல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் ஏடிஎம் இயந்திரங்களில் இதுவரை 48 லட்சம் ரூபாய் கொள்ளை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஏடிஎம் மையங்களில் கைவரிசை காட்டியவர்கள் வடமாநில கொள்ளையர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறிய காவல்துறை ஆணையர் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்தது குறித்து மேலும் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முழுவதும் 15 இடங்களில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஏடிஎம் இல் நடைபெற்ற நூதன திருட்டு தொடர்பாக சிசிடிவி பதிவுகள் உள்ளதாகவும் அவை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்