''கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமை முடிவெடுக்கும்''- அண்ணாமலை
அதிமுக தலைவர்களான அண்ணாத்துரை, ஜெயலலிதா பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய சர்ச்சை கருத்துகளை அடுத்து, வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியை அடுத்து, பாஜக, அதிமுக இடையே கூட்டணி தொடருமா எனக் கேள்விகள் எழுந்தன.
இதையடுத்து, டெல்லி சென்ன முன்னாள் அமைச்சர்கள் பாஜக மா நில அண்ணாமலையை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு டெல்லி தலைமை மறுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெரும்பாலான மா.செக்கள் பாஜகவுடன் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக அக்கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.
இத நிலையில், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதால் அதிமுக தலைமை தேசிய ஜன நாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இதை அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக தலைமை அறிக்கையின் இறுதியில் குறிப்பிட்டிருந்த நன்றி. மீண்டும் வராதீர்கள் என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு அதிமுகவினர் டிரெண்டு செய்து வருகின்றனர்.
தேசிய ஜன நாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது பற்றி பாஜக மா நில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், அதிமுக அறிக்கையை முழுமையாக படித்தோம். தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக முடிவு குறித்து தற்போது எதுவும் பேச விரும்பவில்லை. பின்னர் பேசுகிறேன்…பாதயாத்திரையில் அரசியல் பற்றி பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.