திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (12:08 IST)

நடராஜனுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது - பரபரப்பு தகவல்

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.


 

 
சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் பாகங்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
அதோடு அவருக்கு சமீபத்தில் நுரையீரல் அடைப்பும் ஏற்பட்டது. எனவே, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. எனவே, அவரை மருத்துவமனையில் வந்து சந்திப்பதற்காக, சிறையில் உள்ள சசிகலா, பரோலில் வெளிவர அனுமதி கேட்டு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் மனுவை கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் நிராகரித்து விட்டது.
 
இந்நிலையில், நடராஜனுக்கு மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்தது எனவும், அவர் நலமாக இருக்கிறார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.