வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2016 (14:22 IST)

போயஸ் கார்டனில் நடராஜன்?: பின்னணி என்ன?

போயஸ் கார்டனில் நடராஜன்?: பின்னணி என்ன?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த ஒரு வார காலமாக போயஸ் காரடனில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.


 
 
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசியலில் பல குழப்பங்கள் நிலவி வருகிறது. பல அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகின்றனர்.
 
இந்த சூழலில் அதிமுகவை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் பல சதிகள் நடப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட நடராஜன் மீண்டும் போயஸ் கார்டன் பக்கம் வந்துள்ளார். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற அவர் பல ரகசிய திட்டங்கள் தீட்டுவதாகவும் கூறப்படுகிறது.
 
இதற்கு முன்னரும் அதிமுக சிதற வேண்டிய சூழல் வந்த போது இதே நடராஜன் தான் ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்து கட்சியை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. நடராஜனும், திருநாவுக்கரசரும் சேர்ந்து அதிமுகவுக்கு ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தார்கள் அப்போது.
 
இப்பொழுதும் அது போன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளதால் அதே கூட்டணி தற்போது ஒன்று சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நடராஜனும், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் சேர்ந்து அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பல திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
 
நடராஜனின் ஆலோசனையின் பேரிலே தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்து முதல்வரின் உடல் நலன் குறித்து விசாரித்து அதிமுகவுக்கு ஆதரவாக இருபோம் என கூறியதாக பேசப்படுகிறது.