செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 மார்ச் 2018 (13:07 IST)

நடராஜனின் உடல் அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம்

உடல் நலக்குறைவால் காலமான நடராஜனின் உடல் இன்று அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என திவாகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று அதிகாலை மரணமடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. 
 
அதை ஏற்ற சிறை நிர்வாகம் அவருக்கு 15 நாள் பரோல் வழங்கியது. அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது. 
 
இந்நிலையில் நடராஜனின் உடல் தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என சசிகலாவின் சகோதர் திவாகரன் தெரிவித்துள்ளார்.