செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (08:30 IST)

செருப்பு விவகாரத்தில் சிறுவனை இழிவுபடுத்தியது அமைச்சரா? பத்திரிகைகளா? நமது அம்மா கேள்வி

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று சிறுவன் ஒருவனை அழைத்து தமது செருப்பை கழட்ட சொன்னதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன
 
இந்த நிலையில் இது குறித்து நமது அம்மா பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அடிப்படையில் வெள்ளந்தியாக பேசக்கூடிய மனிதர் திண்டுக்கல் சீனிவாசன் என்றும், செருப்பை கழற்ற உதவி கேட்ட அமைச்சரின் செயல் தவறானது அல்ல என்றும், இதனை தொலைக்காட்சிகள் பெரிதாக்கியது அமைச்சரை மட்டுமல்ல பரிவோடு உதவிய அந்த சிறுவனையும் இழிவுபடுத்தும் செயல் என்றும் தெரிவித்துள்ளது 
 
எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின்
அதுமட்டுமின்றி 65 வயது வயது உடைய எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலினுக்கு 70 வயது பெரியவர் ஒருவர் செருப்பை மாட்டும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நமது அம்மா,  இதனை ஊடகங்கள் பரபரப்பாக காட்டிவார்களா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. நமது அம்மாவின் இந்த கட்டுரை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது