வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (13:48 IST)

தகைசால் தமிழர் விருது: மூத்த அரசியல்வாதி ஆர்.நல்லகண்ணு தேர்வு

Nallakannu
தமிழ்நாடு அரசின் தகைசால் விருதுக்கு மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திமுக அரசு தொடங்கியதிலிருந்து தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்த விருதை அவர்களுக்கு வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை கௌரவிக்கும் வகையில் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது