1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2023 (17:20 IST)

நாய்க்கறி சாப்பிடுபவர்களா? ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு நாகாலாந்து ஆளுநர் கண்டனம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சமீபத்தில் நாகாலாந்து மக்கள் நாய் கறி சாப்பிடுபவர்கள் என்று விமர்சனம் செய்ததாக செய்திகள் வெளியானது. இதற்கு ஆர் எஸ் பாரதி விளக்கம் அளித்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நாய் கறி சாப்பிடுபவர்களா? நாங்கள் என ஆர் எஸ் பாரதி பேச்சுக்கு நாகலாந்து ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நாகலாந்து ஆளுநர் இல கணேசன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகா மக்கள் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஒட்டுமொத்த நாகா மக்களையும் நாய் கறி சாப்பிடுவது போல் சித்தரிப்பதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும்  நாட்டின் கலாச்சாரத்தை சிதைக்கும் வகையில் ஆர் எஸ் பாரதியின் பேச்சு அமைந்துள்ளது என்றும் நாகா மக்களுக்கும் தமிழர்களுக்குமான இணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

உணவு பழக்கத்தை வைத்து நாகா மக்களை கொச்சைப்படுத்த கூடாது என்று கூறிய இல கணேசன் ஒட்டுமொத்த நாகா மக்களையும் நாய்க்கறி சாப்பிடுவது போல சித்தரிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

Edited by Mahendran