1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (17:16 IST)

என் தேசத்தை நாசமாக்கிய ஒரே செயல் இலவசம்: சீமான் ஆவேசம்

seeman
என் தேசத்தை நாசமாக்கிய ஒரே செயல் இலவசம் தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக இலவசங்கள் குறித்த வாதங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இலவச அறிவிப்புகளை தேர்தல் அறிக்கைகளில் வெளியிடக்கூடாது என பாஜக வலியுறுத்தி வரும் நிலையில் திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
 
குறிப்பாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் இலவசத்திற்கு ஆதரவு அளித்து வருகிறார். இந்த நிலையில் இது குறித்து சீமான் கூறியபோது இலவசங்களால் என் தேசம் நாசமாய் போனது என்றும் அத்தியாவசிய பொருள்களை கூட வாங்க முடியாத அளவுக்கு மக்களை வைத்ததுதான் இந்த இலவசத்தின் கொடுமை என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இலவசமாக கொடுக்கும் பொருள்கள் வாங்கும் பணம் எங்கிருந்து வந்தது என்றும் அதுவும் மக்களிடமிருந்து பெற்றதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.