புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (10:00 IST)

சுய ஊரடங்கு உத்தரவிலும் வெளுத்து வாங்கும் மட்டன் வியாபாரம்!

வெளுத்து வாங்கும் மட்டன் வியாபாரம்
கொரோனா வைரஸ் பாதுகாப்பை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வரும் நிலையில் சுய ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மட்டன் கடைகளில் கூட்டம் அலைமோதியதாக செய்திகள் வெளிவந்துள்ளது,
 
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டன் கடைகளில் வியாபாரம் ஜோராக இருக்கும். அதிலும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு என்பதால் அனைவரும் மட்டன் எடுத்து சாப்பிட முடிவு செய்து காலை முதல் மட்டன் கடைகளில் குவிந்து வருகின்றனர். கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா பரவும் என்ற வதந்தி காரணமாக மட்டன் வியாபாரம் மட்டுமே அமோகமாக நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் காலை 7 மணிக்கு மேலும் மட்டன் கடைகளில் கூட்டம் அதிகமானதை அடுத்து போலீசார் அந்த கடைகளை மூட உத்தரவிட்டதால் வேறு வழியின்றி மட்டன் கடைக்காரர்கள் கடைகளை மூடி வருகின்றனர்.
 
மேலும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு என்பதால் நேற்று மாலையே காய்கறி, மளிகைப்பொருட்களை மக்கள் மொத்தமாக வாங்கி வைத்ததால் நேற்று நள்ளிரவு வரை மளிகை, காய்கறி கடைகளில் அமோகமாக வியாபாரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது