இந்து விரோதி என்று என்னிடம் கூறி விளையாட்டு காட்ட வேண்டாம்: கமல்ஹாசன்
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது இந்து ஆதரவு அமைப்பின் நிர்வாகி ஒருவர் கமல்ஹாசனை நோக்கி காலணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரையும் அவருடன் இருந்த நபர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது அவர்கள் 'கமல்ஹாசன் ஒரு இந்து விரோதி என்றும் பாரத மாதாஜிக்கு ஜே' என்றும் முழக்கமிட்டபடி சென்றனர்.
இந்த களேபரத்திற்கு பின்னரும் கமல்ஹாசன் தங்குதடையின்றி பொதுக்கூட்ட மேடையில் பேசினார். அப்போது அவர், 'என்னை அந்த விரோதி, இந்த விரோதி, இந்து விரோதி என்று கூறி விளையாட்டு காட்ட வேண்டாம். நான் யாருக்கு எதிரி என்பது மக்களுக்கு தெரியும். அதுவும் நானாக வளர்த்து கொண்ட விரோதம் கிடையாது. உங்களுடைய நேர்மையின்மைதான் என்னை உங்களுடைய விரோதியாக மாற்றியது
இன்று நடந்த நிகழ்வுகள் வெற்றி அடைந்த மாணவர்களை பார்த்து தோல்வி அடைந்தவர்கள் ஏளனமாக பேசியது போல் இருப்பதாகவும், ஒரு வருடத்தில் கட்சி வளர்ந்துவிட்டதால் ஏற்பட்ட பொறாமை காரணமாக அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் கமல்ஹாசன் மேலும் தெரிவித்தார்