வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (08:30 IST)

காயத்ரி ரகுராம் வகித்த பதவியில் சினிமா பிரபலம்… தமிழக பாஜக அறிவிப்பு!

தமிழக பாஜகவில் மிக தீவிரமாக இயங்கி வந்தவர் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில வாரங்களுக்கு முன்னர் நடிகை காயத்ரி ரகுராம் ஆறு மாத காலத்திற்கு கட்சியிலிருந்து அவர் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும்நீக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ஆறுமாதக் நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.” எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இப்போது அவர் வகித்து வந்த வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக திரைப்பட இசையமைப்பாளர் தினா நியமிக்கப்படுவதாக அறிவித்து தமிழக பாஜக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.