செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2020 (21:31 IST)

அம்மா உணவகங்களில் ஜூலை 5 வரை விலையில்லா உணவு வழங்கப்படும்- முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் நாள்தோறும் கொரொனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஏற்கனவே சென்னை, காஞ்சுபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வரும் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஊரடங்கில் வாழ்வாதாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் உண்ண உணவின்றி இந்த ஊரடங்கு காலத்தில் கஷ்டப்பட கூடாது என்று தமிழக முதல்வர் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்  உள்ள அம்மா உணவகங்களில் ஜூலை 5 வரை விலையில்லா உணவு வழங்கப்படும்  என  தெரிவித்துள்ளார். #CMEdappadiPalaniswami #Chennai #AmmaUnavagam #corono #curfew