திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (11:32 IST)

குழந்தை எங்கடி காணோம்? விற்றுவிட்டு உட்காந்திருந்த தாய்! – விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்!

விருதுநகரில் குழந்தையை தனது கணவருக்கு தெரியாமல் மனைவி விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த ஜெபமலர் என்பவருக்கும் கடந்த 2019ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ள நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ஜெபமலர் தனது ஊருக்கு குழந்தையோடு சென்றுள்ளார்.

சில வாரங்கள் கழித்து குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடிக்கு மணிகண்டன் சென்ற நிலையில் குழந்தையை ஜெபமலர் ரூ.3 லட்சத்திற்கு விற்றுவிட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெபமலர் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.