செய்திகளில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடாது: 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்..!
பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்த செய்தியில் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என சட்டமன்றத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வை 50,000 மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சட்டமன்றத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் நாகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டில் ஆல்பாஸ் ஆன மாணவர்கள் தான் இந்த கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதினர் என்று தெரிவித்தார். கொரோனா காலத்துக்குப் பிறகு பள்ளிக்கல்வித்துறை சில சிரமங்களை சந்தித்து வருகிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் செய்திகளில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
பிளஸ் டூ தேர்வு 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சட்டசபையில் விவாதம் நடந்த நிலையில் இந்த விவாதத்திற்கு இவ்வாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
Edited by Mahendran