வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2020 (10:34 IST)

4 ஆயிரத்தை தாண்டிய தேனாம்பேட்டை: சென்னையில் கொரோனா நிலவரம்

4 ஆயிரத்தை தாண்டிய தேனாம்பேட்டை
சென்னையில் கொரோனா பாதிப்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையை காலி செய்துவிட்டு சொந்த ஊர் செல்லும் மனப்பான்மைக்கு பெரும்பாலானோர் வந்துவிட்டனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தேனாம்பேட்டையில் 4 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,364 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தேனாம்பேட்டை மண்டலத்தில் இதுவரை 4,031 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
 
மேலும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4226 பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 3330 பேர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3539 பேர்களும், திருவிக நகரில் 2992 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையின் 15 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 33,244 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.