திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2020 (10:16 IST)

சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி: கொரோனாவா?

அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி
கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உச்சத்தில் இருந்து வருகிறது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் விட அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இந்தியாவில் கொரோனாவால் சுமார் 10,000 பேர் வரை பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் சாதாரண பொதுமக்களை மட்டுமின்றி பிரபலங்களையும் விட்டுவைக்காமல் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளார் என்பதும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் என்பவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடும் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது
 
இருப்பினும் சத்யேந்திர ஜெயின் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவருக்கு கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனையை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நாட்டில் உள்ள மக்களை கொரோனாவில் இருந்து காக்க பாடுபட்டு வரும் சுகாதாரத்துறை அமைச்சக்கே உடல்நலக் குறைவு என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது