செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 1 ஜூலை 2020 (18:39 IST)

தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று  மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  எனவே தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 94,049ஆக அதிகரித்துள்ளது.

இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,852 ஆகும், இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 பேர் ஆகும். இதில் 32 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கபட்டிருந்தன் என தகவல் வெளியாகிறது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 60,533 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்கள்  எண்ணிக்கை  36,826 ஆக உயர்ந்துள்ளது, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை  22,777 ஆகவும்,  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 929 ஆக அதிகரித்துள்ளது.