1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 ஜூலை 2020 (17:07 IST)

ஜூலை 2020 - எண்ணியல் பலன்கள்: 4, 13, 22, 31

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:  நாயகர் ராகு

 
கவலைகளை வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த  முகத்துடன் காணப்படும் நான்காம்  எண் வாசகர்களே இந்த மாதம் எண் அதிபதி ராகுவின் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி  செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. 

தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது  தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து  போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

வாழ்க்கை  துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமை யாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர்  பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். பெண்களுக்கு எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி  செய்யும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது.  அடுத்தவர் களிடம் பழகும்போது கவனம் தேவை.
 
பரிகாரம்: அம்மனை வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.