1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (15:26 IST)

தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்கள் அதிகம் நீர்பாசனம் பெறும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்கிழக்கு பருவமழை பொழியும். இதில் அரபிக்கடலோர மாநிலங்கள் அதிக மழையை பெறுகின்றன. தவிரவும் காவிரி நதியில் நீர்வரத்து இந்த மழை நாளில் அதிகரிக்கிறது. அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை பொழியும் வ்டகிழக்கு பருவமழை டெல்டா பகுதிகள் நேரடி பாசன வசதி பெற உதவுகிறது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அடுத்த 72 மணி நேரத்தில் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வங்க கடலில் அவ்வபோது காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லும் முன் அறிவிப்புகளை கவனமாக கேட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K