எங்கு சென்றாலும் டிரெய்னில் செல்லும் அதிபர்?

Last Updated: ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (12:27 IST)
அமெரிக்க வட கொரியா இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை வியட்நாமில் நடக்க இருக்கிறது. இதற்காக வட கொரியா தலைவர் கிம் ஜோன் உன் புறட்டுள்ளார். 
 
ஆம், வடகொரியாவிலிருந்து ரயிலில் புறப்பட்டு சென்றார் கிம். சீன உள்ளூர் நேரப்படி சீன எல்லையான டாண்டோங்கிற்கு சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வந்தார். 
 
பேச்சுவார்த்தைகளை கடந்து நல்லெண்ண பயணமாகவும் கிம் வியட்நாம் செல்வதாக வட கொரியா அரசு ஊடகம் தெரிவிக்கிறது. இந்த பயணத்தில் கிம்முடன் அவர் சகோதரி இருக்கிறார் என நம்பப்படுகிறது.
 
பாதுகாப்பு காரணங்களுக்காக கிம் கூடுமான அளவு தொடர் வண்டியிலேயே பயணிக்கிறார். தென் கொரியா, சீனா செல்லும் போதும் தொடர் வண்டியிலேயே சென்றார். ரயில் மூலமாக சீனா வழியாக வியட்நாம் செல்ல இரண்டரை நாட்கள் ஆகும் என தெரிகிறது. 

இதில் மேலும் படிக்கவும் :