1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (20:33 IST)

2500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடாத மண்குவளை: கீழடி ஆச்சரியம்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த சில வருடங்களாக அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிறன்று 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடாத மண் குவளை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 
 
பொதுவாக மண்பாண்டப் பொருள்களை சுட்டால் மட்டுமே, புவியில் மட்காமல் நீண்ட நாள்கள் இருக்கும்! சுடாத மண்பாண்டப் பொருள்கள் சில நூற்றாண்டுகளிலேயே மட்கிவிடும். ஆனால் கீழடியில் கிடைக்கப்பெற்ற ஒரு சுடாத மனுக்களை 2500 ஆண்டுகளாக மக்காமல் உள்ளது. அது மட்டுமின்றி அந்த மண்குவளை பளபளப்பாக இருப்பதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர் 
 
இந்த சுடாத மண்குவளை 2500 ஆண்டுகளாக மக்காமல் இருப்பது எப்படி? என்று தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய அணிகலங்கள், பானை ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக்காசுகள் , குவளை ஜக் உட்பட 150க்கும் மேற்பட்ட பொருள்கள் கீழடி ஆய்வில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது