செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (11:26 IST)

சசிகலா போன் காலிற்காக வெய்ட்டிங்... கருணாஸ் பேட்டி!

சசிகலா என்னை அழைத்தால் நான் நிச்சயம் சென்று பார்ப்பேன் என கருணாஸ் பேட்டியளித்துள்ளார். 

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு ஊழல் வழக்கில் சசிகலா சிறை சென்றார். அதற்கு சென்ற பிறகு அதிமுக அமைச்சர்கள் அனைவரும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் தலைமையில் இரு அணியாக பிரிந்தனர். 
 
பிறகு இருவரும் இணைந்து அதிமுகவை ஒரு அணியாக மாற்றினர். அதிமுகவிலிருந்து டிடிவி தினகரன் பிரிந்து சென்று அமமுகவை உருவாக்கினாலும் தங்களுக்கு அதிமுகவில் ஆள் இருப்பதாகவும், ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும்  அடிக்கடி கூறி வருகிறார். 
 
இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள் பலர் சசிகலா சிறையில் இருந்து விரைவில் வர வேண்டும் என தங்களது எதிர்ப்பார்ப்பை வெளிப்படையாகவே வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கருணாஸும் பேசியுள்ளார். அவர் கூறியதாவது... 
 
சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவில் மாற்றம் ஏற்படும் என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. நான் எம்.எல்.ஏ ஆவதற்கு காரணமாக இருந்தவர் சசிகலா. அவர் சிறையில் இருந்து வந்து என்னை அழைத்தால் நான் சென்று பார்ப்பேன் என பேட்டியளித்துள்ளார்.