செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (13:59 IST)

விரைவில் தமிழகத்திற்கு விடிவு காலம் - மு.க.ஸ்டாலின் சூசக பேச்சு

தமிழகத்திற்கு விரைவில் ஒரு விடிவு காலம் பிறக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

 
சேலம் மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் இரா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ மகளின் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய போது கூறியதாவது:
 
திமுக கொள்ளைப்புறமாக ஆட்சியை பிடிக்க முயல்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மக்களின் ஆதரவோடு திமுக ஆட்சி அமைக்குமே தவிர கொல்லைப்புறமாக ஆட்சி வர திமுக விரும்பவில்லை.
 
முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என அதிமுக எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடிதம் கொடுத்தும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓ. பன்னீர் செல்வம் 10 எம்.எல்.ஏக்களோடு சென்று ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்த போது, சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துங்கள் என ஆளுநர் கூறினார். 
 
ஆனால், தற்போது 19 எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்தும் அமைதி காக்கிறார்.  19 மட்டுமல்ல, அவர்களின் எண்ணிக்கை 20, 25, 27 என தாண்டி போய் கொண்டே இருக்கிறது. மொத்தத்தில் 40 பேருக்கும் மேல் இந்த ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 
 
இதை திமுக எப்படி அணுகப்போகிறது என்பதை இப்போது கூற முடியாது. சட்ட ரீதியாக சிந்தித்து திமுக நல்ல முடிவை எடுக்கும். அது திமுகவின் சுயலத்திற்காக அல்ல. மக்களின் நன்மைக்காகவே. எனவே, கொஞ்ச நாள் பொறுத்திருங்கள். விரைவில் தமிழகத்திற்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்” என அவர் பேசினார்.