திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (11:57 IST)

என்னை விளம்பர பிரியர்னு சொல்றாங்க.. எதுக்கு விளம்பரம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ராணிப்பேட்டையில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு விளம்பரம் தேவையில்லை என கூறியுள்ளார்.

ராணிப்பேட்டையில் மக்களுக்கு உதவும் வகையிலான ரூ.250 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை சென்றார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த பின் பேசிய அவர் “முதல்வர் நரிக்குறவர், இருளர் வீட்டிற்கு சென்றார், அங்கு உணவு சாப்பிட்டார் என்ற செய்திகளை குறிப்பிட்டு நான் விளப்பரப்பிரியராக இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். எனக்கு எதற்கு விளம்பரம்? கடந்த 55 ஆண்டு காலமாக அரசியலில் இருந்து வருகிறேன். இதற்கு மேலும் எனக்கு விளம்பரம் தேவையா என்ன?

அவர்களது வீட்டிற்கு சென்றதன் மூலம் இது நமது அரசு என்ற எண்ணத்தை அனைத்து மக்களிடையேயும் ஆழமாக விதைத்துள்ளோம். அதுதான் முக்கியமானது. இந்த சந்திப்புகளுக்கு பிறகு அவர்கள் சார்ந்து பல நலத்திட்ட உதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.