திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (11:46 IST)

அழிக்க நினைச்சா அழிஞ்சிருவீங்க... குத்திகாட்டிய ஸ்டாலின்!

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் உள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

 
ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை குறித்த மோதல் நிலவி வரும் நிலையில், கடும் பரபரப்புகளுக்கு இடையே இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தவிர வேறு 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடியார் அணியினர் கோஷங்களை எழுப்பி வருவதால் 23 தீர்மானங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி வந்தபோது அவரை வாழ்த்தி வரவேற்ற அதிமுக தொண்டர்கள், ஓ பன்னீர்செல்வம் வந்தபோது வெளியே போ என முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டார். அங்கு அவர், இன்னொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என தெரியும். ஆனால் அந்த பிரச்சனைக்கு செல்ல விரும்பவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் உள்ளனர் என அதிமுக பெயரை குறிப்பிடாமல் சூசகமாகவே பேசினார்.