ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (13:32 IST)

மக்கள் பசியில் வாடுவது அரசுக்கு நியாபகம் உள்ளதா? – கமல்ஹாசன் ட்வீட்!

இந்தியா பட்டினி நாடுகளில் ஒன்றாக உள்ளதை அரசு நினைவு கூர வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசனின் பிறந்தநாள் நவம்பர் 7 அன்று கொண்டாடப்பட உள்ளது. பிறந்தநாள் அன்று அன்னதானம், ரத்த தான முகாம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள மநீமவினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “என் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு 7 லட்சம் உணவுப்பொட்டலங்களை வழங்குகிறார்கள் மநீமவினர்.இது பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. பட்டினிப்பட்டியலில் சிறிய நாடுகளை விடவும் பின்தங்கியிருக்கிறோம்.பசித்தவயிறுகள் அதிகரித்துள்ளன.இந்தக்கவலை நமை ஆள்வோர்க்கு இருக்கிறதாவெனும் நினைவூட்டலும் கூட” என்று தெரிவித்துள்ளார்.