செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (07:34 IST)

மறைந்த சண்முகநாதனுக்கு 2வது முறையாக அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளரான சண்முகநாதன் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறைவு செய்தி கேட்டு உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்திய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று இரவு மீண்டும் சண்முகநாதனுக்கு அஞ்சலி செலுத்தினார்
 
நேற்று மாலை அஞ்சலி செலுத்திய நிலையில் இரவு மீண்டும் அஞ்சலி செலுத்த முதல்வர் வந்ததை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதாலும் தனது தந்தையின் நிழல் போல் இருந்தவர் என்பதாலும் சண்முகநாதனுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரண்டு முறை அஞ்சலி செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது