திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (12:22 IST)

குளத்தால் வளர்ந்து வந்த சாதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி - ஸ்டாலின் அதிரடி!

குளத்தை மையமாக வைத்து நடந்த சாதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். 

 
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் மற்றும் சோளிங்கநல்லூர் பகுதிகளில் வண்ணான் குளம் வண்ணக் குளம் ஆகியிருக்கிறது. சென்னை அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் அமைந்திருக்கும் வண்ணான்குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 
 
இது குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டிருக்கிறது. அதில், முதல்வர் தலைமையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வுக் கூட்டத்தில் சென்னை அம்பத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் மண்டலம் வார்டு 82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம் வார்டு 192ல் அமைந்திருக்கும் குளத்தின் பெயரை திருத்தம் செய்து வண்ணக் குளம் என பெயர் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.