1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (12:35 IST)

மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் நியமனம்! – முதல்வர் அறிவிப்பு!

அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் மீண்டும் தொடங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கி பல்வேறு திட்டங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர மக்கள் நல பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதற்கு பின் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது இந்த பணியாளர்களின் பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் தற்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாகவும், மக்கள் நலப்பணியில் பங்கேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக மக்கள் நலப்பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ.7,500 மாதம்தோறும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.