கார்ப்பரேட்டுகளுக்கு கார்பெட் விரிக்கும் திட்டம் இது! - மு.க.ஸ்டாலின் கண்டனம்
மத்திய அரசின் புதிய சுற்றுசூழல் தாக்க வரைவு அறிக்கைக்குக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்புகல் வலுத்துள்ள நிலையில், மத்திய அரசின் இத்திட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.
அரசு அனுமதி பெற்று ஆலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகள் மீது மக்கள் வழக்கு தொடுக்க முடியாதபடி சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு-2020 (Environment Impact Assesment – 2020) என்ற அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது தொடர்பாக பலமான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் இந்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் “மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களோடு கை குலுக்கி புதிய சுற்றுசூழல் தாக்க வரைவு அறிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இது போபால் விபத்திற்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. பொதுமக்கள் கருத்து கேட்புக்கான காலம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு குறித்து மக்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும். இயலாதபட்சத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்தப்பிறகு முடிவுகளை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.