இனிமே அவரை முதல்வர் பழனிசாமின்னுதான் கூப்பிடுவேன்! – ஸ்டாலினின் திடீர் மாற்றம்!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மு.க.ஸ்டாலின் இனி தமிழக முதல்வரை முதல்வர் பழனிசாமி என்றே அழைக்க போவதாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளன. திமுக சார்பில் கிராமசபை கூட்டங்களை கூட்டி மக்களிடையே பேசி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்த காட்டமான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின் “எடப்பாடி தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று இனி முதல்வரை முதல்வர் பழனிசாமி என்றே அழைக்கப்போகிறேன். கழகத்தினரும் இனி அவரை முதல்வர் பழனிசாமி என்றே அழைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.