1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஜனவரி 2021 (07:19 IST)

ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை: புதிய கட்சி தொடங்குகிறாரா அழகிரி?

ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை: புதிய கட்சி தொடங்குகிறாரா அழகிரி?
முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த முன்னாள் முதல்வருமான மு கருணாநிதி அவர்களின் மகன் முக அழகிரி இன்று தனது ஆதரவாளர்களுடன் அரசியல் ஆலோசனை நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ளது 
 
மேலும் மதுரையில் ’கலைஞர் திமுக’ என்ற பெயரில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு உள்ளதால் அழகிரி அந்தப் பெயரில் இன்று தனிக்கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முக அழகிரி தொடங்கும் கட்சிக் கொடியும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இன்றைய அறிவிப்பின் போது முக அழகிரி தனது கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் தனது மகன் தயாநிதி அழகிரிக்கு முக்கிய பதவி கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது மதுரை உள்பட தென்மாவட்டங்களில் முக அழகிரியின் ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதால் அவர் கட்சி ஆரம்பித்தால் திமுகவுக்கு தென்மாவட்டங்களில் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது
 
முக அழகிரிக்கு ரஜினியும் ஆதரவு கொடுப்பார் என்றும் கூறப்பட்டு வருவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில மணி நேரங்களில் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை தொடங்கவிருக்கும் நிலையில் இன்று அவர் புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்