ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (11:07 IST)

பொதுத்தேர்வுகள் நடைபெறுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறுவது எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற வில்லை என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் பொதுத் தேர்வுகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வரும் மே மாதம் பொதுத் தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். எனவே 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என தெரிகிறது