1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 23 டிசம்பர் 2021 (14:49 IST)

அரையாண்டு தேர்வு விடுமுறையை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

25.12.2021 முதல் 02.01.2022 வரை அரையாண்டு விடுமுறை - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  அறிவிப்பு!
 
பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் நெல்லையில் பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு டிச 25 முதல் ஜன.2 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
மேலும், மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க பேருந்துகளில் கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறினார். மேலும், பள்ளி இடைவேளையின் போது மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.