எஸ்.பி ஜனநாதன் மறைவுக்கு அமைச்சர் வேலுமணி இரங்கல்!

sp velumani
siva| Last Updated: ஞாயிறு, 14 மார்ச் 2021 (12:37 IST)
எஸ்.பி ஜனநாதன் மறைவுக்கு அமைச்சர் வேலுமணி இரங்கல்
திரைப்பட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்கள் இன்று காலை காலமானார் என்ற செய்தி திரையுலகினர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்த எஸ்பி ஜனநாதன் திடீரென மயங்கி விழுந்தார். அதன்பின் அவர் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்தது
 
இந்த நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது 
 
இந்த நிலையில் எஸ்பி ஜனநாதன் அவர்களின் மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து தற்போது சற்றுமுன் அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனநாதன் மறைவிற்கு இரங்கல் செய்தி ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி.ஜனநாதன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் & திரைத்துறையினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.இதில் மேலும் படிக்கவும் :