வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 பிப்ரவரி 2023 (08:08 IST)

பாஜக ஒரு கட்சியே கிடையாது, கவர்னர் கோச்சிங் சென்டர்: அமைச்சர் உதயநிதி

Udhayanidhi
பாஜக என்பது ஒரு கட்சியே கிடையாது என்றும் அது ஒரு கவர்னர் கோச்சிங் சென்டர் என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார். 
 
அப்போது பாஜக ஒரு கட்சியே கிடையாது என்றும் அது ஒரு கவர்னர் கோச்சிங் சென்டர் என்றும் சில நாட்கள் கட்சியில் இருந்தவர்களுக்கு கவர்னர் பதவி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் ஆடியோ வீடியோ ஆகியவற்றை வைத்து தான் அந்த கட்சி ஓடிக்கொண்டிருக்கின்றது என்றும் கட்சிக்காரர்களுக்கு உள்ளே ஆடியோவையும் வீடியோவையும் காட்டி பயமுறுத்தி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
 
 தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் மதச்சார்பற்ற கூட்டணிக்கு தான் ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
 
Edited by Siva