1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (13:18 IST)

சம்மர் வந்தாச்சு... பவர் கட்டும் கூடவே வருமா? அமைச்சர் விளக்கம்!!

கோடைகாலத்தில் மின்வெட்டு இருக்குமா என அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார். 
 
தமிழகத்தில் வெயில் காலம் துவங்கியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியூட்டியது. 
 
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
இருப்பினும் பவர் கட் அவ்வப்போது ஒரு நாளில் இருக்க தான் செய்கிறது. இதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் அமைச்சர் தங்கமணி. அவர் கூறியுள்ளதாவது, கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு மின் உற்பத்தி உள்ளது. எனவே மின்வெட்டுகளை நினைத்து வருந்த வேண்டாம். 
 
அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. நாளை முதல் அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். 2 பேர் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.