வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (15:26 IST)

பொதுத்தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் செய்யக்கூடாது: அமைச்சர் உத்தரவு!

பொதுத்தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் செய்யக்கூடாது என மின்வாரியத் துறைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு இன்று தொடங்கி உள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ளது.

இந்த நிலையில் பொது தேர்வு தயாராகும் மாணவ மாணவிகள் இரவில் கூட படிப்பார்கள் என்பதால் மின்  நிறுத்தம்   ஏற்பட்டால் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்பதால் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 அனைத்து மின்வாரிய பொறியாளர்களுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு பிறப்பித்த உத்தரவில் பொதுத்தேர்வு முடியும் வரை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யக்கூடாது என்றும் எந்த காரணத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளின் படிப்பிற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்றும் தனது உத்தரவில்  தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடியும் வரை தமிழக முழுவதும் மின் நிறுத்தம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva