திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (07:42 IST)

பேருந்து கட்டண உயர்வு குறித்து அன்புமணிக்கு எப்படி தெரிந்தது?அமைச்சர் சிவசங்கர் கேள்வி..!

sivasankar
பேருந்து கட்டணம் உயர்த்துவதாக செய்திகள் வெளியானது என அன்புமணி கூறிய நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ’போக்குவரத்து துறை அமைச்சராக நான் இருக்கிறேன், எங்களை வழிநடத்த முதல்வர் இருக்கிறார், எங்களுக்கு தெரியாமல் பேருந்து கட்டண உயர்வு அன்புமணிக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்பதை அவர் தான் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் குறைந்த போக்குவரத்து வசதி இல்லை என்றும் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இருப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தொழிலாளர்களே கூறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தனியார் பேருந்து உரிமையாளர்களும் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி வருகிறார்கள் என்றும் நம் மக்கள் மீது சுமை ஏறக் கூடாது என்பதற்காகத்தான் இதுவரை பேருந்து கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் தமிழகத்திற்கு பேருந்துகள் வாங்குகிறோம் என்றும் அந்த பேருந்துகள் நம் ஊருக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்கள் செய்யப்பட்டு வரவுள்ளது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

மேலும் மினி பேருந்துகள் எங்கெங்கு தேவை என்பதை மக்களிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்றபடி மினி பேருந்துகளை இயக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Edited by Siva