வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (11:51 IST)

1.5 லட்சம் பேர் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil Balaji
இதுவரை 1.5 லட்சம் பேர் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தெரிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. அதன் பின் கால அவகாசம் நீடிக்கப்பட்டு ஜனவரி 31, பிப்ரவரி 14 மற்றும் பிப்ரவரி 28 என நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுடன் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் முடிவடைந்தது.
 
இந்த நிலையில் இதுவரை ஒன்றை லட்சம் பேர் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
மேலும் இனி மேலும் கால அவகாசம் கிடையாது எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் இனிமேல் இணைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran