1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (19:04 IST)

எல்லை அரசியல் நமக்கு வேண்டாம்! – தமிழர்களுக்கு KGF யஷ் கோரிக்கை!

குடியுரிமை சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் எல்லை அரசியல் நமக்கு வேண்டாம் என கேஜிஎஃப் ஹீரோ யஷ் பேசியுள்ளார்.

கேஜிஎஃப் என்ற ஒற்றை படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் கன்னட ஹீரோ யஷ். சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சினிமா துறை சார்ந்த விழா ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ”இந்த தலைமுறைக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். நமக்குள் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என்ற வித்தியாசம் வேண்டாம். நாம் எல்லாரும் இந்தியர்கள். இந்தியாவின் எந்த ஒரு மூலையில் உள்ள மனிதர் சாதித்தாலும் அது இந்தியாவின் சாதனையாக பார்க்கப்பட வேண்டும். வேற்றுமைகளை கடந்து இந்த தலைமுறை ஒற்றுமையாக வாழ வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் தமிழர்களின் அன்பு கிடைப்பது கடினமான காரியம் என்றும், அது தனக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தால் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் யஷ் இப்படி பேசியிருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.