குதிரை வண்டிப் பந்தயத்தப் பந்தயத்தி வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு !
குதிரை வண்டிப் பந்தயத்தில்வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு !
கரூரில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற குதிரை வண்டிப் பந்தயத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 90 க்கும் அதிகமான குதிரைகள் கலந்து கொண்டன ! வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகளையும், பாராட்டுகளையும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த தினத்தினையொட்டி மாபெரும் குதிரை வண்டி எல்கை பந்தயம் எனப்படும் குதிரை ரேக்ளா ரேஸ் போட்டியானது சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில், பெரிய குதிரை, நடு குதிரை, புது குதிரை என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டி களில் கரூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 90 க்கும் அதிகமான குதிரைகளை அவற்றின் உரிமையாளர்கள் அழைத்து வந்து கலந்து கொள்ள வைத்தனர்.
கரூர் டூ ஈரோடு சாலையில் கரூர்பாலிடெக்னிக்கி லிருந்து சத்திரம் வரை நடைபெற்ற இந்த குதிரை வண்டி பந்தயத்தில் பெரிய குதிரை பந்தயத்தில் கரூர் பாரத் பஸ் கம்பெனி முதல் பரிசையும், சூர்யா அர்விந்த் 2 ம் பரிசையும், கோவை பாமா கண்ணன் 3 ம் பரிசையும் பெற்றனர். இதேபோல சிறிய குதிரை பிரிவில், திருச்சி சதீஸ் முதல் பரிசையும், உறையூர் விஜயா 2 ம் பரிசையும், சிங்காரவேலன் 3 ம் பரிசையும் பெற்றனர்.
இதேபோல, புதிய குதிரை பிரிவில், பழனி ஜெகநாதன் பிரதர்ஸ், கரூர் சகதி போலீஸ் 2 ம் பரிசையும், மாப்பிள்ளை விநாயம் 3 ம் பரிசையும் பெற்றனர். இந்த குதிரை வண்டி போட்டிகளை காண பார்வையாளர்கள் கரூர் டூ ஈரோடு சாலையில் கரூர் பாலிடெக்னிக்கிலிருந்து புன்னஞ்சத்திரம் வரை பொதுமக்கள் இருபுறமும் திரண்டு நின்று பார்த்து ரசித்தனர். வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம், 20 ஆயிரம் 15 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் மற்றும் கேடயம் ஆகியவற்றை, கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவருமான ஏ.ஆர்.காளியப்பன், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.