திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (12:23 IST)

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ப்ளு ஸ்டார் திரைப்படம்!

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி இயக்குனர் பா ரஞ்சித் தயாரித்துள்ள அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.

அரக்கோணம் பகுதியில் நடக்கும் விதமாக கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் கலக்கியது.

இதையடுத்து இந்த திரைப்படம் மார்ச் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அமேசான் ப்ரைம் மற்றும் டெண்ட்கொட்டா ஆகிய ஓடிடிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.