வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 21 நவம்பர் 2019 (12:11 IST)

ஒத்தைக்கு ஒத்தை நின்னா தெரிஞ்சிடும்! – ராஜேந்திர பாலாஜி சவால்!

எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட அதிமுக தயார் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால் விடுக்கும் தோனியில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்து வரும் சூழலில், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான மோதல் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் அதிமுகவுக்கு தனித்து நிற்க பலமில்லை என்று பேசி வருகின்றனர். புதிய கட்சி தொடங்கியவர்களும், தொடங்க இருப்பவர்களும் கூட அரசியல் வெற்றிடம் இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதே அதிமுக அமைச்சர்கள் அதிகப்பட்ச வேலையாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு அமைச்சரும் அவரவர்க்கு ஆளுக்கொன்று பேசுவது கட்சியினரையே குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. அதிமுக மீது எந்த விமர்சனங்கள் வந்தாலும் உடனே வாண்டடாக சென்று பதிலளிப்பவர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் ஜெயக்குமார்.

தற்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட அதிமுக தயார். அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் யாருக்கு பலம் என்பது தெரிந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.

இது அவர் எதிர்க்கட்சிகளையும், எதிரில் இல்லாத கட்சிகளையும் நோக்கி விடுத்த சவாலாக சொல்லப்பட்டாலும், தங்களுடைய கூட்டணி கட்சிகளையே லைட்டாக டேமேஜ் செய்வது போல பேசியிருப்பதாக சிலர் நொந்து கொள்கிறார்களாம்.