1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (11:16 IST)

காலத்திற்கேற்ற கல்வி இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை: ஆளுனர் ஆர்.என்.ரவி உரை

காலத்திற்கேற்ற கல்வி இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், காலத்திற்கேற்ற கல்வி கிடைக்காததால் இளைஞர்களின் திறன் பாதிப்பு அடைகிறது என்றும் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தியுள்ளார்.
 
பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி  இன்று உரையாற்றியபோது, ‘இளைஞர்களின் திறன் குறைபாட்டால் மாநில மற்றும் தேசிய வளர்ச்சி பாதிப்பு அடைந்து வருகிறது என்றும், தேசிய கல்வி கொள்கை இளைஞர்கள் திறனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் பொறியியல், அறிவியல் பாடங்களை தமிழில் படிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran